துறை பற்றி
துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி தொடங்கப் பெற்ற 1964 ஆம் ஆண்டே தமிழ்த்துறையும் தொடங்கப்பெற்றது. இத்துறையின் முதல் தமிழ்த்துறைப் பேராசிரியராக முனைவர் பி.எஸ்.சோமசுந்தரம் அவர்கள் பணியாற்றினார். பின்னர் இக்கல்லூரியின் முதல்வராகவும் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். பெருமை மிகுந்த இத்தமிழ்த்துறையில் முனைவர் பூவண்ணன், முனைவர் மதிசீனிவாசன், முனைவர் பெ.இலக்குமி நாராயணன், முனைவர் பா.நடராசன், பேராசிரியர் ஹ.குருராகவேந்திரன் முதலான சீர்மிகு பேராசிரியர்கள் பணியாற்றினர். மாணவர்களின் தமிழ் மொழி அறிவை வளப்படுத்துவதையும் மாணவர்கள் சமுதாயத்தில் மிகச்சிறந்த நல்ல மனிதனாக உருவாவதையும் நோக்கமாகக் கொண்டு இத்துறை செயல்பட்டு வருகிறது. இலக்கியங்களை ஆர்வத்துடன் வாசிப்பதையும் சிறந்த மொழி அறிவோடு பேசுவதையும் எழுதுவதையும் ஆய்வுசெய்வதையும் வளர்க்க வேண்டும் என்கிற நோக்கில் மாதந்தோறும் இலக்கிய இன்பம் எனும் இலக்கிய நிகழ்ச்சியும் ஆண்டுதோறும் பாரதியார் விழாவும் பல்வேறு பொருண்மைகளில் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தமிழ்த்துறைத் தலைவராக முனைவர் ப.முருகன் அவர்கள் பணியாற்றிவருகிறார்.
துறையின் பணி
தமிழ் மொழியில் மாணவர்களின் ஆளுமையை வளப்படுத்த பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகள், போட்டிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களின் திறமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்த்துறை செயல்படுகிறது. தமிழ் மொழியில் மாணவர்களின் அறிவை வளர்ப்பது, இலக்கியத்தில் ஆர்வத்தைத் தூண்டுவது மற்றும் வாழ்க்கையைப் பற்றிய சரியான புரிதலைப் பெறுவதற்கான நோக்கத்தில் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் மாணவர்களுக்காக மாணவர்களால் மாணவர்களே நடத்தும் ‘இலக்கிய இன்பம்’ எனும் இலக்கிய நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இயல், இசை, நாடகம் ஆகியவற்றில் முதன்மை கவனம் கொண்டு மாணவர்களின் திறன்களை ஊக்குவித்துக் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, விவாதங்கள், கவிதை வாசிப்பு அமர்வுகள் முதலானவை ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழ் விழாவில் நடத்தப்படுகின்றன. மேலும் பாவை விழா, பாரதியார் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகள் / மாநாடுகள் ஆகியன ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இவற்றில் பெறப்படும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ISBN / ISSN எண்ணுடன் நூலாக்கமும் செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் தமிழ்த்துறையை ஆராய்ச்சித் துறையாக மாற்ற இவ்வாறாகத் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். மேலும் தமிழ் மாத இதழையும் தொடங்க உள்ளோம்.
துறையின் பார்வை
சமகாலத் தமிழ்ச் சமூகமானது தமிழ்ப் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழியின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த தமிழ் இலக்கியப் படைப்புகள் மற்றும் இலக்கணம் குறித்துத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்கிறது. அதை நோக்கமாகக் கொண்டு, மாணவர்களின் மனதில் ஆராய்ச்சி சிந்தனைகளையும் நல்லிணக்கத்தையும் கொண்ட இளைய சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருத்தல்.
துறையின் சிறந்த நடைமுறைகள்
- இலக்கிய இன்பம், தமிழ் மொழி வகுப்பு அறிமுக விழா
E-RESOURCES
“பன்முக நோக்கில் சேக்கிழார்” - இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதல்நாள் (03.08.2020) நிகழ்ச்சி | Click here |
“பன்முக நோக்கில் சேக்கிழார் - கருத்தரங்கம் - முனைவர் சீதாலட்சுமி சேக்கிழார் காட்டும் மகன்மை நெறி (04.08.2020) நிகழ்ச்சி | Click here |
“பன்முக நோக்கில் சேக்கிழார்-கருத்தரங்கம்-மருத்துவர்டத்தோ வ.கதிரேசன்-சேக்கிழார் காட்டும் தொண்டு நெறி (05.08.2020) நிகழ்ச்சி | Click here |
“பன்முக நோக்கில் சேக்கிழார்-கருத்தரங்கம்-முனைவர் சிவ.ஆதிரை - சேக்கிழார் காட்டும் தோழமை நெறி-பகுதி 1 (06.08.2020) நிகழ்ச்சி | Click here |
“பன்முகநோக்கில் சேக்கிழார் -கருத்தரங்கம் - கலாநிதி வரதராசன் பிரசாந்தன் - சேக்கிழார் காட்டும் ஞானநெறி (07.08.2020) நிகழ்ச்சி | Click here |
“பன்முக நோக்கில் சேக்கிழார் - கருத்தரங்கம் - முனைவர் மு. இராசேந்திரன்- சேக்கிழார் காட்டும் பக்திநெறி (08.08.2020) நிகழ்ச்சி | Click here |
“பன்முக நோக்கில் சேக்கிழார்-பன்னாட்டுக் கருத்தரங்கம்-முனைவர் மா. சிதம்பரம்-சேக்கிழார் என்றொரு மாக்கவி (09.08.2020) நிகழ்ச்சி | Click here |
“தமிழ்மொழி வகுப்பு அறிமுக விழா (28.09.2020) நிகழ்ச்சி | Click here |
DEPARTMENT YOUTUBE CHANNEL
Click here to youtube channel
Will be updated soon...