துறை பற்றி
இளங்கலைத் தமிழ் இலக்கியத்துறை 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தப் பாடப்பிரிவு சென்னைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழக விதிகளுக்குட்பட்டு பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலனுக்காக, இதழியலும் மொழிபெயர்ப்பும் மற்றும் அடிப்படை கணினி போன்ற பாடங்களையும் துறை இணைத்துள்ளது.
துறையின் பணி
மாணவர்கள் நவீனத் தொழில்நுட்பங்களைக் கற்றுப் பயன்படுத்த தமிழ்க் கணினியியல் சான்றிதழ்ப் படிப்பு, தமிழகக் கலைகள் பற்றிய முழுமையான புரிதலைப் பெற நாட்டுப்புறக் கலைகள் குறித்த பட்டயப் படிப்பு, வரலாற்று, பண்பாட்டுச் சிறப்பை உணர்ந்து உந்துதல் பெற தமிழகம் தழுவிய அளவில் கள ஆய்வு, ஆய்வறிஞர்களின் ஆய்வுரைகளையும் அனுபவங்களையும் கேட்டுச் செம்மைப்படுத்திக்கொள்ள வருடந்தோறும் தேர்ந்த புலமையாளர்களைக் கொண்ட பயிலரங்கம், தேசிய/ பன்னாட்டளவிலான கருத்தரங்கம்/ மாநாடு, பன்முகப் புலங்களையும் அறிமுகப்படுத்துவதன்வழி தங்களுக்கான துறையைத் தேர்ந்தெடுக்க உதவியாக மாதந்தோறும் குறிப்பிட்ட துறையில் புலமை பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் மாணவர்கள் தங்கள் தனிதிறமைகளை, ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்தவும் உதவும் வகையில் செந்தமிழ்க்கூடல் நிகழ்வு, மாதந்தோறும் தமிழியலின் பல்வகைப் பரிமாணங்கள் குறித்த ஆசிரியரின் உரையும், ஆசிரியர் - மாணவர் விவாதங்களையும் கொண்ட தமிழ்த்தேன் நிகழ்வு, பிற இடங்களில் நிகழும் பயிலரங்கம், பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி போன்ற பல்வகை நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள வைத்தல், பாடத்திட்டத்தைத் தாண்டிய சமூக சேவைகளைச் செய்ய மாணவர்களை ஊக்கப்படுத்தல், வேலைவாய்ப்பு தொடர்பான போட்டித் தேர்வுகளுக்காக மாணவர்களைப் பயிற்றுவித்தல் போன்ற செயல்களில் தமிழ் இலக்கியத்துறை தொடர்ந்து வினையாற்றி வருகிறது.
துறையின் பார்வை
உலகின் தொன்மையான மொழிகளில் மிக முக்கியமான மொழியாக இருப்பதோடு உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ் மொழி. இத்தகைய சிறப்புடைய தமிழ்மொழியின் இலக்கிய, இலக்கண மரபுகளையும், பண்பாட்டு, வரலாற்றுச் சிறப்புகளையும் நவீனத் தொழில்நுட்பங்கள்வழி நுட்பமாகக் கற்று இன்றைய உலகமயமாதல் சூழலில் சமூகப் பொறுப்புணர்வுடன் பங்காற்றும் அறிவுசார் இளைய சமுதாயத்தை உருவாக்குதல்.
துறையின் சிறந்த நடைமுறைகள்
- தமிழ்க் கணினியியல் - சான்றிதழ்ப் படிப்பு
- தமிழகம் தழுவிய அளவில் கள ஆய்வு
- வருடந்தோறும் பயிலரங்கம், தேசிய/ பன்னாட்டளவிலான கருத்தரங்கம்/ மாநாடு மாதந்தோறும் செந்தமிழ்க்கூடல் நிகழ்வு
- மாதந்தோறும் தமிழ்த்தேன் நிகழ்வு
- பிற இடங்களில் நிகழும் பல்வகை நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள வைத்தல்
- பாடத்திட்டத்தைத் தாண்டிய சமூக சேவைகளைச் செய்ய மாணவர்களை ஊக்கப்படுத்தல்
- வேலைவாய்ப்பு தொடர்பான போட்டித் தேர்வுகளுக்காக மாணவர்களைப் பயிற்றுவித்தல்
Workshop on Folkloristics - New Trends
Senthamizh koodal - Monthly event
International Conference on Chitrilakkiyangal
International Conference on Chitrilakkiyangal
EVS Trip
Educational Tour - Gangaikonda Chozhapuram
Educational Tour - Gangaikonda Chozhapuram
Workshop on Sanga Ilakkiya Payirchi Payilarangam
VC Speech - Workshop on Folkloristics - New Trends
Will be updated soon...